×
 

தமிழக மக்களை அவ்ளோ சீக்கிரம் ஏமாத்த பாக்குறீங்களா? பகல் கனவு பலிக்காது... நயினார் விமர்சனம்..!

கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சற்று வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் பட்டியலை வெளியிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார். வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு சொன்னீர்களே செய்தீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார். இந்த நிலையில் பூங்கா, மருத்துவமனை போன்ற வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வில்லை என்றும் அவற்றை செய்தீர்களா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார். 

விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய், சிறு தானியங்கள், செக்கு எண்ணெய், நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் ஆகியவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி என ஆனது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தேர்தலின் போது இப்படியொரு வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு, பொங்கல் பண்டிகையின் போது வெளிமாநிலங்களில் இருந்து வெல்லத்தை வரவழைத்து கொடுத்ததையும், அதுவும் கெட்டுப்போனதாகப் புகார்கள் பல எழுந்ததையும் தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் கூறினார். விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றிய உங்கள் கட்சியை எவரும் மன்னிக்கவும் மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: இருட்டில் மூழ்கடிக்கும் திமுக அரசு... கல்லா கட்ட இது ஒரு வழியா?.. நயினார் கண்டனம்..!

போன தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளிலேயே நிறைவேற்றாத வாக்குறுதிகள் வரிசை கட்டி நிற்கையில், வரவிருக்கும் தேர்தலுக்கான அறிக்கையைத் தயாரிக்க ஒரு குழுவை நியமித்துள்ளது உங்கள் அறியாமையின் உச்சம் என்றார். தமிழக மக்களை அத்தனை எளிதாக மீண்டும் ஏமாற்றிவிடலாம் என்ற உங்கள் பகல் கனவு இனி ஒருநாளும் பலிக்காது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொங்கலுக்கு மஞ்சள் கிழங்கையும் சேர்த்து குடுங்க... முதல்வருக்கு நயினார் வலியுறுத்தல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share