×
 

"அவசரப்படாதீங்க"..! யாரை நம்பியும் போகாதீங்க..! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

யாரும் அவசரப்பட்டு கட்சியை விட்டு வெளியேற வேண்டாம் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இன்று கட்சியிலிருந்து ராஜினாமா செய்து, புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அடுத்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடன் அவர் அறிவித்த இந்த இயக்கத்திற்கு ஆன்லைன் மூலம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது அழைப்பு வெளியான சுமார் மூன்றரை மணி நேரத்திற்குள் wetheleader.org இணையதளத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக இணைந்தனர்.

இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அண்ணாமலை தனது அறிவிப்பில், "We The Leaders" அமைப்பின் மூலம் தன்னார்வலர்களை அழைத்தார். இந்த இயக்கம் அடிமட்ட மட்டத்தில் தலைமைத்துவத்தை வளர்ப்பதையும், சமூக மாற்றத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் யாரும் அவசரப்பட்டு கட்சியை விட்டு வெளியேற வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். பாஜகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் திரும்பி வந்த வரலாறு இருப்பதாகவும் கூறினார். கடந்த தேர்தலில் கூட 100 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டவர் அண்ணாமலை எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜக பலமான கட்சியாக தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம்..! அமைச்சர் ஆனந்த் உறுதி.!

கட்சியை விட்டு போனவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், விலகியவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம் என்றார். இதே கூட்டணியோடு சேர்ந்து உள்ளாட்சி தேர்தலில் பாஜக போட்டியிடும் என்றும் அண்ணாமலையோடு எனக்கு எந்த கருத்துவேறுபாடும் இல்லை எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: தூக்கத்தில் இருந்து முழிச்சிக்கோங்க விஜய்... தவெக ஆட்சியை டாரு டாராக கிழித்த அதிமுக முக்கிய புள்ளி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share