×
 

தினுசு தினுசா குற்றங்கள்..! நீதிபதிக்கே பாதுகாப்பில்ல... மக்களுக்கு நிம்மதியில்ல..! சாடிய நயினார்..!

தமிழகத்தில் தினுசு தினசாக குற்றங்கள் நடைபெறுவதாக திமுக அரசை நயினார் நாகேந்திரன் சாடினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதிமன்றத்தில் பொறுப்பு வகித்து வந்த நீதிபதி ஜி. சுதாகர் மீது ஒரு வழக்குதாரர் அரிவாள் வீசி தாக்க முயன்ற சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் ஒரு குடும்ப வழக்கு தொடர்பான விசாரணையின்போது நடந்துள்ளது. வழக்கில் தீர்ப்பு தனக்கு எதிராக வந்ததால் ஆத்திரமடைந்த பாலமுருகன் என்பவர், நீதிபதி சுதாகர் மீது அரிவாளை வீசியுள்ளார்.

நீதிமன்ற அறையிலேயே இப்படியொரு ஆபத்தான தாக்குதல் முயற்சி நடப்பது, நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.இந்தச் சம்பவம் நடந்த உடனேயே நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, தாக்குதல் நடத்திய பாலமுருகனை கட்டுப்படுத்தி கைது செய்தனர். இந்த நிலையில், திமுக ஆட்சியில் நீதிமன்றத்திலேயே சட்டம் ஒழுங்கு காணாமல் போனதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த இருப்பதாகவும் திறனற்ற திமுக ஆட்சி முடிய இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கிறது என்று மக்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அந்த நிம்மதியைக் கூட நீடிக்க விடாது என்பதற்காக இதுபோன்ற பல விஷயங்கள் நடப்பதாக கூறினார். தினந்தோறும் தினுசு தினுசான குற்றங்கள் நடந்து, தமிழக மக்களின் அச்சத்தை அதிகரிப்பதாகவும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: அருவருப்பான பேச்சு..! திரிஷாவை விஜய்யுடன் தொடர்பு படுத்தி கருத்து... நயினாருக்கு கண்டனம்..!

பட்டப்பகலில் காவலர்களும் வழக்கறிஞர்களும் சூழ்ந்திருக்கும் நீதிமன்ற வளாகத்தில் நீதியரசருக்கே பாதுகாப்பில்லாத நிலையில், பாமர மக்களுக்கு எப்படி பாதுகாப்பிருக்கும் என்று கேட்டார். ஆட்சியின் இறுதிகட்ட நாட்கள் வரை வெற்று விளம்பர அறிவிப்புகளை வெளியிடுவதில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு, சட்டம் ஒழுங்கைக் கடைக்கண் கொண்டுகூட கவனிக்காத திமுக அரசைத் தப்பித்தவறி கூட மீண்டுமொரு முறை தமிழக மக்கள் ஆட்சி அமைக்க விடமாட்டார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: இழப்பை ஏளனம் செய்வதா? நயினார் மன்னிப்பு கேட்கணும்... நாஞ்சில் சம்பத் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share