×
 

மாத்திரையை கூட போதை பொருள் மாதிரிதான் பயன்படுத்துவாரா..? சிக்கிய அமைச்சர்... நயினார் தாக்கு.!

அமைச்சர் சரத்தின் வீடியோ போன்ற வைரல் ஆன நிலையில் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது. தமிழ்நாடு மனிதவளத்துறை அமைச்சரர் சரத்குமார் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு வீடியோ பரவியது. இந்த வீடியோ பலரிடையே அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. பலர் இதை உண்மையென நம்பி பகிர்ந்தனர், சிலர் அரசியல் காரணங்களுக்காக இதை பயன்படுத்த முயன்றனர். ஆனால் அமைச்சர் சரத்குமார் இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து, தவறான பிரசாரம் என்று விளக்கம் அளித்தார். 

சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையது. அப்போது சரத்குமார் தனது குடும்பத்தினருடன் ஐபிஎல் போட்டியை நேரில் காண சென்னை அல்லது பிற மைதானத்திற்கு சென்றிருந்தார். வீடியோவில் அவர் மைதானத்தில் சொகுசு பெட்டியில் அமர்ந்திருக்கும் காட்சி தெரிகிறது. அவர் ஏதோ ஒரு பொருளை நொறுக்கி பொடியாக்கும் செயல் போல் தோன்றியது. இந்த காட்சியை சிலர் எடுத்து, “போதை மருந்து” என்று கூறி வீடியோ வேகமாக வைரலானது. 

தவெக அமைச்சரின் தன்னிலை விளக்க வீடியோ திருப்தியளிக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தவெக அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத், பொதுவெளியில் போதைப்பொருள் உபயோகித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், அதற்கு அவர் கொடுத்துள்ள தன்னிலை விளக்கமும் கடும் அதிர்ச்சியளிப்பதோடு பல்வேறு சந்தேகங்களையும் கிளப்புகிறது என்று கூறினார்.

இதையும் படிங்க: அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை.. தற்போது சாத்தியமில்லை..!! அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்..!!

சுமார் 4 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, “ஆன்டிபயாடிக்” உள்ளிட்ட வீரியமிக்க மருந்துகளையே, மருத்துவர்கள் “டானிக்” வடிவில் கொடுத்துக் கொண்டிருக்கையில், ஒன்றரை வயது குழந்தைக்கு எந்த மருத்துவர் மாத்திரை கொடுத்தார்? என்றும் அங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் குழந்தையையும் காணவில்லை, உடல்நிலை சரியில்லாத குழந்தையை எங்கேயோ விட்டுவிட்டு தகப்பன் ஜாலியாக கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டே மாத்திரையை நுணுக்கிக் கொண்டிருந்தாரா? எனவும் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரையை, யாராவது போதைப் பொருள் போல கோடிழுத்துக் கொண்டிருப்பார்களா? மாத்திரையைக் கூட போதைப்பொருளைப் போலவே “ரெடி” செய்யும் மனநிலை கொண்டவர் எப்படி நிதானமாக மக்கள் சேவையாற்றுவார்? என்றும் சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.

இதுபோன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பும் இவ்விவகாரத்தை, முதல்வர் விஜய் எவ்வித சமரசமுமின்றி தீர விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி இருக்கிறார். 

இதையும் படிங்க: பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share