×
 

பாஜகவை வீழ்த்துவதே முதல் கடமை! திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு பின் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவைச் சந்தித்த பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் முக்கிய பேட்டியளித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் சந்தித்துப் பேசினார்.

எங்கள் கட்சியைப் பொறுத்தவரை, ஒரு சில தொகுதிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பெறுவது முக்கியமல்ல. கட்சியின் நலனை விட தேசத்தின் நலனும், மதச்சார்பற்ற கொள்கைகளைக் காப்பதுமே எங்களுக்கு மிக முக்கியம் எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளைச் சிதைத்து வரும் பாஜகவை வீழ்த்துவதே எங்களது முதல் மற்றும் முதன்மையான கடமை. அந்த ஒற்றை இலக்கை நோக்கியே திமுக தலைமையிலான எங்களது கூட்டணி பயணிக்கிறது" என வீரபாண்டியன் உறுதிபடக் கூறினார்.

இதையும் படிங்க: ஊரான் வீட்டு புள்ளைக்கு சுயமரியாதை கல்யாணமாம்... அவங்க வீடுனா சுபமுகூர்த்தம்..! வினோஜ் பி. செல்வம் விமர்சனம்..!!

தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக நடைபெற்றதாகவும், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

திமுக கூட்டணி ஒரு கொள்கை ரீதியான கூட்டணி என்றும், எதிர்க்கட்சிகள் எத்தனை முனைப் போட்டிகளுடன் வந்தாலும் திமுக தலைமையிலான இந்தக் கூட்டணியே மீண்டும் மாபெரும் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இடதுசாரி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடும் அடுத்த சில நாட்களில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share