இந்தியா ›

மருத்துவர்களுக்கு செக்..! மருத்துவமனைகளில் ரீல்ஸ் வெளியிட தடை..!

மருத்துவமனைகளில் மருத்துவர்கள் ரீல்ஸ் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் சமூக ஊடக பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. சமூக ஊடகங்களில் மருத்துவர்கள் தங்களை விளம்பரப்படுத்தி நோயாளிகளை ஈர்க்கும் போக்கு அதிகரித்து வருவதால், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுக்கும் நோக்கில் இவை கொண்டுவரப்பட்டுள்ளன.புதிய விதிகளின்படி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தங்கள் சேவைகளை விளம்பரப்படுத்தும் வகையில் ரீல்ஸ் அல்லது பிற குறுகிய வீடியோக்களைப் பதிவிடக் கூடாது.

நோயாளிகளின் சான்றுகள், பரிந்துரைகள், வெற்றிக் கதைகள், சிகிச்சைக்கு முன்னும் பின்னும் உள்ள புகைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்கள் திறமையைக் காட்டும் உள்ளடக்கங்கள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. “சிறந்த மருத்துவர்”, “நம்பர் ஒன் நிபுணர்”, “நூறு சதவீத குணம்”, “உத்தரவாதமான சிகிச்சை” போன்ற ஆதாரமற்ற அல்லது மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்களை வெளியிடவும் அனுமதியில்லை. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான நோயாளி அனுபவங்கள், குரல்கள் அல்லது சிகிச்சை முடிவுகளை உருவாக்கி விளம்பரப்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் இணைந்து பணம் பெற்று நோயாளிகளை ஈர்க்கும் ஒப்பந்தங்களைச் செய்யக்கூடாது. போலி பின்தொடர்பவர்கள், லைக்குகள், மதிப்பீடுகள் அல்லது மதிப்புரைகளை வாங்கி தங்கள் பிரபலத்தை உயர்த்துவதும் தடை. மருத்துவமனைகளில் தள்ளுபடிகள், கூப்பன்கள் அல்லது பரிசுத் தொகுப்புகள் மூலம் தேவையில்லாத ஆலோசனைகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களும் அனுமதிக்கப்படாது. நோயாளிகளின் தனிப்பட்ட விவரங்கள், புகைப்படங்கள் அல்லது சிகிச்சைப் பதிவுகளை அவர்களின் தெளிவான ஒப்புதல் இல்லாமல் பகிரக்கூடாது.

இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே! ரேஷன் கடைகளில் மீண்டும் விற்பனை தொடக்கம்!

இருப்பினும், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையிலான விழிப்புணர்வு உள்ளடக்கங்களுக்கு தடை இல்லை. நோய்கள் குறித்த உண்மையான தகவல்கள், சுகாதார விழிப்புணர்வு, கல்விசார் விவாதங்கள் மற்றும் அறிவியல் அடிப்படையிலான விளக்கங்கள் ஆகியவற்றை மருத்துவர்கள் வீடியோக்கள் மூலம் பகிரலாம். அத்தகைய உள்ளடக்கங்கள் தனிப்பட்ட விளம்பரமாகவோ நோயாளிகளை ஈர்க்கும் முயற்சியாகவோ மாறக்கூடாது. மருத்துவர்கள் தங்கள் பெயர், தகுதிகள் மற்றும் பதிவு எண்ணை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும். மருத்துவமனைகள் தங்கள் சேவைகள் குறித்த புறநிலை தகவல்களை மட்டும் பகிரலாம்.

இதையும் படிங்க: மது குடிக்கப் பணம் தர மறுத்த மனைவி கொலை! காப்பாற்ற வந்த மகளுக்கு,ம் கத்திக்குத்து! கணவருக்கு ஆயுள் தண்டனை!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்.. தேர்தலுக்கு முன்பே களமிறங்கிய தவெக! ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!!தமிழ்நாடு
தீபாவளி பண்டிகை: சென்னை மெட்ரோ ரயில்களில் மாலை நேர ‘பீக் ஹவர்ஸ்’ சேவை நீட்டிப்பு!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी