சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!
டெல்லியில் வானவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சென்னையிலும் போராட்டம் நடைபெற்றது.
டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு பெரிய அளவிலான இளைஞர் எழுச்சியாக உருவெடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஏற்பட்ட கேள்விப்பட்டியல் கசிவு மற்றும் பிற தேர்வு ஒழுங்கீனங்கள் தொடர்பாக ஏற்பட்ட கோபம் இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஜூன் 6ஆம் தேதியிலிருந்து ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்த அமைதியான போராட்டம், பின்னர் பெரிய அளவிலான மோதல்களுடன் தொடர்கிறது.
இந்தப் போராட்டத்தை முதன்மையாகத் தொடங்கியது 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற இளைஞர் அமைப்பு. டிஜிட்டல் தகவல் தொடர்பு வியூக நிபுணர் அபிஜீத் திப்கே இதைத் தொடங்கினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒரு கருத்து இந்த அமைப்பின் பெயருக்கும், சமூக ஊடகத்தில் பரவலான ஆதரவுக்கும் காரணமாக அமைந்தது. இந்த அமைப்பு விரைவில் தேர்வு சீர்திருத்தங்கள், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கோரி தெரு போராட்டங்களுக்கு மாறியது.
தற்போது டெல்லியில் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை எழும்பூரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, போராடிய மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!
இதேபோல் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து சென்னை ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முடக்கங்களை எழுப்பினர். டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டம் வலுத்து உள்ள நிலையில் அங்கு மாணவர்களை தாக்கிய சம்பவத்தை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னையிலும் போராட்டம் வெடித்துள்ளது. பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராடிவரும் நிலையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாடகர் அறிவுவின் அதிரடி போராட்டம்... கைதுக்குப் பிறகு முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு..!!