அடுத்தடுத்து 2 முறை நீட் தேர்வில் தோல்வி... மாணவி எடுத்த விபரீத முடிவு!
சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
முதலில் 12ம் வகுப்பு தேர்வு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கிடைத்து வந்த மருத்துவக் கல்லூரி இடங்கள், தற்போது நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிடைக்கும். நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்து போவதாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 4ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனிடையே நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் தோல்வி அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சட்டத்தின் பின் ஒளிந்தாலும் மோடி அரசு தோர்த்து விட்டது..! வறுத்தெடுத்த ராகுல்காந்தி..!
2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை நீர் தேர்வு எழுதி கட் ஆப் வராத நிலையில் மீண்டும் அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த நிலையில் 4-5-2025 ஆம் ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுத தயாராகி கொண்டிருந்த நிலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.நேற்று தேர்வு படித்து கொண்டிருந்த தர்ஷிணி/22, படிக்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார் . கிளாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழில் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவது அதிகரிப்பு... பிராந்திய மொழிகள் ஆதிக்கம்.. சரியும் ஆங்கிலம்..!