வெடிக்கும் நீட் பிரச்சனை... வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்... மாணவர்களுக்கு அழைப்பு..!
நீட் விவகாரத்தில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலுப்பெற்று வரும் நிலையில், டெல்லியில் நடைபெறும் நீட் எதிர்ப்பு போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நடைபெறும் போராட்டத்தின் எதிரொலியாக சென்னையிலும் மாணவர்கள் போராட தொடங்கினர்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஒருங்கிணைந்த குரல் இப்போது இந்திய அளவில் பரவ வேண்டும் என்கிற வலியுறுத்தலுடன் புதிய போராட்ட அழைப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட இந்த அழைப்பு, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் முக்கியத்துவம் பெறுகிறது.
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீட்டை பாதிக்கும் வகையில் இந்தத் தேர்வு செயல்படுவதாக பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு இதற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியும், மத்திய அரசின் அணுகுமுறை மாறாமல் உள்ளது.
இதையும் படிங்க: சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!
இந்தச் சூழலில் மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து” என்கிற முழக்கத்தை இந்திய அளவில் வலுப்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஜூலை 23-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாணவர் சங்க பிரதிநிதிகளும், கல்லூரி மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் மாணவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!