×
 

அமைச்சர் நேரு மீது ஏன் வழக்கு பதியல? லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக சரமாரி கேள்வி..!!

அமைச்சர் நேரு மீது ஏன் இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்ன லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.

தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருக்கும் கே.என்.நேருவின் துறையில் பணி நியமனம் தொடர்பான ஒரு பெரிய ஊழல் குற்றச்சாட்டு கடந்த ஆண்டு முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமலாக்கத் துறை விசாரணையில், 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற நகராட்சி துறையில் உள்ள 2,538 பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் நியமனத்தில் பெரும் ஊழல் நடந்ததாக கண்டறியப்பட்டது.

ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும், ED தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 'ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்' என்ற நிறுவனம் தொடர்பான வங்கி மோசடி வழக்கில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது கிடைத்த ஆவணங்கள், டிஜிட்டல் சாட்சியங்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களின் அடிப்படையில் எழுந்தவை.

அக்டோபர் 27, 2025 அன்று ED தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் எழுதி, இந்த ஊழல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடுமாறு கோரியது. இதில் அமைச்சர் கே.என்.நேரு மீதும் அவரது நெருங்கிய தொடர்புடையவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்டவை இதை வலுவாக எதிர்த்து வருகின்றன.

இதையும் படிங்க: ஊழல் கோட்டை திமுக... அழிவு காலம் வந்துடுச்சு... கொந்தளித்த நயினார்..!!

இந்த இந்த வாரம் தொடர்பாக அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது. அதில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அமைச்சர் நேரு மீது ஏன் இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. விரைந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: ஊழல்களில் கூட்டாளி திமுக கூட்டணி... கோடி கோடியாக கொள்ளை..!! தமிழிசை தாக்கு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share