×
 

நெல்லை இரட்டை கொலையில் திடுக் திருப்பம்... காட்டிக்கொடுத்த டவர் நெட்வொர்க்.. தொக்காய் சிக்கிய 5 பேர் யார்?

வீரவநல்லூர் தந்தை - மகன் இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு. 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் 

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மற்றும் 5 வயது மகன் ஜெயராஜ் என்ற சிறுவன் கொலை செய்யப்பட்டார்‌. குறிப்பாக காரால் மோதி விபத்து ஏற்படுத்தி காளிமுத்துவின் தலையைத் துண்டித்த அந்த மர்ம கும்பல் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் காளிமுத்து தலையை வைத்து சென்றது. 

இந்த சம்பவமானது தமிழகத்தையே உலுக்கிய நிலையில் முதற்கட்டமாக காளிமுத்துவின் சொந்த ஊரான மூலச்சி பகுதியில் நடைபெற்று வந்த பழிக்கு பழி தொடர் கொலை சம்பவத்தின் தொடர்ச்சி என்றும், குறிப்பாக மூலச்சி பகுதியைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் என்பவர் கொலை வழக்கில் காளிமுத்து முக்கிய குற்றவாளியாக இருந்ததால் இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

இது தொடர்பாக நெல்லை சரக டிஐஜி, நெல்லை எஸ் பி உள்ளிட்ட உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையை உலுக்கிய கொடூரம்... தந்தை - மகன் கொலை..! 11 பேர் மீது பாய்ந்த வழக்கு..!!

இந்த நிலையில் சுமார் 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் பெருமாள் பாண்டியன் மகன்கள் 3 பேர், அதே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் பாண்டியனின் உறவினர் சிவகுருநாதன் மகன்கள் 3 பேர் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
 

இதையும் படிங்க: அன்று வெட்டிய அதே இடத்தில்... நெல்லையை உலுக்கிய இரட்டைக்கொலை... பகை வளர்ந்ததன் பகீர் பின்னணி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share