×
 

“அவையில் தேவையில்லாமல் பேச கூடாது!” - எம்.பி-க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் 2வது நாளான நேற்று மக்களவையில் 18 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. சுருக்கமாக கேள்வி கேட்கவும், பதில் அளிக்கவும் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை கேட்டுக்கொண்டார் சபாநாயகர் ஓம் பிர்லா. 

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவாதங்களின் போது இடையூறு விளைவித்த மற்றும் தேவையற்ற கருத்துகளைப் பதிவிட்ட மக்களவை உறுப்பினர்களைச் சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாகக் கண்டித்துள்ளார். மக்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிய அவையில், விதிகளுக்குப் புறம்பாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.


நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது சில உறுப்பினர்கள் சபாநாயகரின் அனுமதியின்றிப் பேசுவதும், விவாதங்களின் திசையை மாற்றுவதும் தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து ஓம் பிர்லா தெரிவித்ததாவது. அவையில் பேச வாய்ப்பு வழங்கப்படும் போது மட்டுமே உறுப்பினர்கள் பேச வேண்டும். தேவையில்லாமல் மற்றவர்களின் பேச்சில் குறுக்கிடுவதோ அல்லது தேவையற்றக் கருத்துகளைக் கூறுவதோ அவையின் மாண்பைக் குலைக்கும் செயல்" என அவர் சுட்டிக்காட்டினார்.


நாடாளுமன்றம் என்பது நாட்டின் மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பு. அதன் கண்ணியத்தைக் காக்க வேண்டியப் பொறுப்பு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்களுக்கும் உண்டு என்பதை அவர் வலியுறுத்தினார். தொடர்ச்சியாக அவையின் விதிமுறைகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்தார்.

இதையும் படிங்க: இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது ஆண்டின் முதல்  கூட்டத்தொடர்! 

 

முக்கிய மசோதாக்கள் மற்றும் பொதுப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, உறுப்பினர்களிடையே ஏற்படும் வார்த்தைப் போரைத் தணிக்கச் சபாநாயகர் இத்தகையக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இது அவையின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: “13 கோடி தமிழர்கள் எப்படி சிறுபான்மை?” - மத அரசியலை சுளுக்கெடுத்த சீமான் ஆவேச பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share