நோட்டா வழக்கில் திடீர் திருப்பம்... தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!
தமிழக தலைமை செயலர் 6 மாதத்தில் உரிய முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
லோக்சபா, சட்டசபை தேர்தலை போல் உள்ளாட்சி தேர்தலிலும் நோட்டாவிற்க்கு வாக்களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த உத்தரவிட கோரி வழக்கு. தமிழக தேர்தல் ஆணையம் இது குறித்து ஏற்கனவே தமிழக அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக பதில் மனு தாக்கல்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் வினோத். தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழ் நாட்டில் லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் வேட்பாளர்களை பிடிக்கவில்லை என்றால் நிராகரிக்க மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் ‘நோட்டா’ இடம்பெற்றுள்ளது.
இது வாக்காளர்களுக்கு அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் போட்டோவிற்கு வாக்களிக்கும் வாய்ப்பு குடிமக்களுக்கு வழங்கவில்லை
எனவே தமிழகத்தில் இனி வரவிருக்கும் அனைத்து உள்ளாட்சித் தேர்தல்களிலும் ‘நோட்டா’ இடம்பெற மாநில அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பினேன். எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவே எனது மனுவின் அடிப்படையில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் நோட்டாவிற்கு வாக்களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அமர்க்களம் ரீ-ரிலீஸ்! அஜித் - ஷாலினி திருமண நாளில் ரசிகர்களுக்கு பெரும் விருந்து!
இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், உள்ளாட்சித் தேர்தல்களிலும் 'நோட்டா' விருப்பத்தை அமல்படுத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்காக தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023ல் உள்ளது போலவே, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச் சீட்டுகளில் 'நோட்டா'வைச் சேர்க்கத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காகத் தமிழ்நாடு ஊராட்சிகள் விதிகள், 1995ல் உரிய திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி, 2024 ஜூன் 7ம் தேதி தமிழக அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டவுடன், ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் 'நோட்டா' முறை நடைமுறைக்கு வரும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் தலைமை செயலர் 6 மாதங்களில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: அரசியலில் சச்சின் டெண்டுல்கர் போல திமுகதான் பல ரெக்கார்டுகளை வைத்துள்ளது! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை!