என்னது சீமான் மன்னிப்பு கேட்டாரா? ஆதாரத்துடன் போட்டு உடைத்த நா.த.க நிர்வாகி...!
நடிகை பாலியல் புகார் வழக்கில் சீமான் மன்னிப்பு கேட்டதாக வெளியான தகவல் குறித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் விளக்கி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜய லட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், தானே சென்று தலையைக் கொடுத்தது போல, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் தரப்பு கோரியது.
வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கருதிய நீதிமன்றமோ, 3 மாத காலத்துக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. வழக்கு விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு மனுத்தாக்கல் செய்தது. இவை அனைத்தும் அரசியல் காரணங்களுக்காகவே நிகழ்த்தப் படுவதாகவும், விசாரணையை நிறுத்தி வைக்குமாறும் சீமான் தரப்பு கோரியது.
சமாரசமாக பேசி முடிவெடுங்கள் என உச்சநீதிமன்றம் கூறி, விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. சீமான் மீது விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனை அடுத்து நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகார் வழக்கு ரத்து செய்யப்பட்டது. வழக்கில் சீமான் மன்னிப்பு கோரியதாக கூறப்பட்டது. இதனை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: அத விடுங்க வேற கேளுங்க… பிரஸ்மீட்டில் சலித்துக் கொண்ட சீமான்…!
சீமானுக்கு எதிராக முன்னாள் நடிகை தொடர்ந்த போலி வழக்கை இன்று ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என கூறி உள்ளார். வழக்கில் (376 IPC) முகாந்திரம் இல்லை என்பதாலே அது உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் மன்னிப்பு கோரவில்லை என்றும் எது எப்படியோ, பொய் குற்றச்சாட்டுகளும், போலி வழக்கும் தகர்க்கப்பட்டு, திமுக வின் கடைசி ஆயுதமும் நொறுக்கப்பட்டுவிட்டது என்றும் கூறி உள்ளார்.
இதையும் படிங்க: சீமான் மீதான வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!