×
 

ஹைஸ்பீடில் எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம்.. பயணிகள் கடும் சிரமம்..!!

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), கிருஷ்ண ஜெயந்தி (ஆகஸ்ட் 16), மற்றும் வார இறுதி (ஆகஸ்ட் 17) ஆகியவற்றால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தனியார் ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து கட்டணங்கள் சுமார் 2000 முதல் 4000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

உதாரணமாக, சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.4000 வரை கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வழக்கமாக 600 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை ஆம்னி பேருந்து கட்டணம் வசூல் செய்யப்படும். சென்னை டூ நெல்லை, சென்னை டூ சேலம், சென்னை டூ திருச்சி என பல்வேறு வழித்தடங்களுக்கும் ரூ.1500 முதல் ரூ.3000 வரை வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: 3 நாள் தொடர் லீவு.. தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்.. அதிர்ச்சியில் பயணிகள்..!!

இந்த கட்டண உயர்வு, ஆடி மாத திருவிழாக்கள் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பயணத் தேவை அதிகரித்ததால் ஏற்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இந்த அதிகப்படியான கட்டண வசூல் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்துகளில் முன்பதிவு விரைவாக நிறைவடைவதால், பயணிகள் ஆம்னி பேருந்துகளை நாட வேண்டிய நிலை உள்ளது.

பாமக தலைவர் அன்புமணி, இதுபோன்ற கட்டண உயர்வுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், அபராதம் விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். பயணிகள் புகார் அளிக்க 1800-425-6151, 044-24749002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். தொடர் விடுமுறைகளில் இதுபோன்ற கட்டண உயர்வு தொடர்கதையாக உள்ளதால், அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தலைமைப் பண்பு இல்லைன்னா தோல்வி நிச்சயம்... எடப்பாடியை வசைப்பாடிய ஓபிஎஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share