NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதால் வருத்தம்... டிடிவி தினகரன் பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணி இருந்து வெளியேறும் முடிவை ஓபிஎஸ் மாற்றிக்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.
ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் முக்கிய தலைவராகவும், தேனி மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க தலைவராகவும் திகழ்ந்தவர். மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்த இவர், பலமுறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்.
2017-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பின்னர் தனித்தனி அணியாகவும் செயல்பட்டார். இருப்பினும், 2022-ல் கட்சியின் பொதுக்குழு மூலம் இபிஎஸ் ஒரே தலைவராக உயர்த்தப்பட்டதால், ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்தப் பின்னணியில், பாஜகவுடனான கூட்டணி மற்றும் அதன் அரசியல் உத்திகளில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தங்களது உறவை முற்றிலுமாக முறித்துக் கொண்டதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கூட்டணி தொடர்பான எந்த அறிவிப்பு குறித்தும் ஓபிஎஸ் தரப்பு வெளிப்படுத்தவில்லை.
இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி தான் கரெக்ட்.. திமுக வேலைக்கு ஆகாது! விளாசிய TTV தினகரன்..!
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் விலகியது வருத்தம் அளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாஜக தேசிய தலைமையிடம் தொடர்ந்து பேசி வருகிறேன் என்று கூறிய டிடிவி தினகரன்,
என்னை விடவும் 7 ஆண்டு காலமாக பாஜகவுடன் நல்ல உறவில் இருந்தவர் ஓபிஎஸ் தான் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இருந்து வெளியேறும் முடிவை ஓபிஎஸ் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அம்புட்டும் உருட்டு… 6 முறை போன் பண்ணியும் நயினார் எடுக்கல! OPS ஓபன் டாக்.