×
 

கடவுள் முருகனையே கீண்டல் பண்ணுறீங்களா? வழக்கறிஞர் ஜோதி மன்னிப்பு கேட்கணும்! இந்து அமைப்புகள் போர்க்கொடி!

உயர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, முருக கடவுள் பற்றி கிண்டலடித்த வழக்கறிஞர் ஜோதி மன்னிப்பு கேட்க வேண்டும் என, ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தீபத்தூண் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, முருகப்பெருமானை கிண்டலடிக்கும் வகையில் வாதிட்டதாக ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவர் ஹிந்து பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், வழக்கிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

வழக்கின் போது வழக்கறிஞர் ஜோதி, “முருகனுக்கு இரண்டு மனைவியர் இருக்கலாம். ஆனால், ஒரு இடத்தில் மட்டும்தான் தீபம் ஏற்ற முடியும்” என்று வாதிட்டதாகக் கூறப்படுகிறது. இது முருகப்பெருமானின் திருமண வாழ்வை கேலியாகப் பேசியதாக ஹிந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

விஸ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத இணைப் பொதுச்செயலர் ஸ்தாணுமாலயன் கூறுகையில், “ஹிந்து பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் அறநிலையத்துறை சம்பளம் வாங்கும் ஜோதி, ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தியுள்ளார். இது ஹிந்துக்களின் கையால் ஹிந்துக்களின் கண்களை குத்துவது போன்றது. திமுகவின் ஹிந்து விரோத போக்கையே இது காட்டுகிறது. ஜோதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். திருப்பரங்குன்றம் வழக்கிலிருந்து அவரை அறநிலையத்துறை விடுவிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: உன்னை போல் முட்டாள் இல்லை!! வாயை கொடுத்து சிக்கிய வெங்கடேசன்!! எம்.பி பதவிக்கு வேட்டு!

ஹிந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கூறுகையில், “திமுகவைச் சேர்ந்த ஜோதி வக்கிரமான வாதத்தை முன்வைத்துள்ளார். முருகப்பெருமானை இவ்வளவு அவமதிக்க முடியுமா? வேறு மத கடவுள் பற்றி இப்படி பேசும் துணிவு ஜோதிக்கு உள்ளதா? நீதிமன்றம் இதுபோன்ற கருத்துகளை கண்டிக்க வேண்டும்” என்றார்.

பாஜக மாநில இளைஞரணி செயலர் சூர்யா கூறுகையில், “வாதம் என்ற பெயரில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் திருமண வாழ்வை உதாரணம் காட்டி இழிவுபடுத்தியது கண்டனத்துக்குரியது. ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் வழக்கத்தை திமுக ஒருபோதும் கைவிடாது. அறநிலையத்துறை கோவில்களைப் பாதுகாக்கவா அல்லது இறை நம்பிக்கையைச் சிதைக்கவா என அமைச்சர் சேகர்பாபு பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

ஹிந்து அமைப்புகள் இந்தச் சம்பவத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இதையும் படிங்க: தி.குன்றம் தீபம் விவகாரம்!! திமுகவுக்கு நெருக்கடி! பழனிசாமி முதல் பவன் கல்யான் வரை அதிரடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share