சோதனைகளை வென்று சாதனை படைத்து முன்னேறுங்கள்! சர்வதேச இளைஞர் தினத்தில் முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு சோதனைகளை வென்று சாதனை படைக்குமாறு இளைஞர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச இளைஞர் தினத்தை (International Youth Day) முன்னிட்டு, நாட்டின் நம்பிக்கையின் வெளிச்சமாகவும் மாற்றத்தின் முகவரியாகவும் திகழும் இளைய சமுதாயத்திற்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச இளைஞர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நம்பிக்கையின் வெளிச்சமாகவும், சமூக மாற்றத்தின் முகவரியாகவும் திகழ்பவர்கள் நமது இளைய சமுதாயத்தினர்தான் என்று முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.
வாழ்க்கையில் குறுக்கிடும் பல்வேறு சோதனைகளையும் தடைகளையும் தைரியத்துடன் வென்று, சாதனைகளைப் படைத்துத் தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும்" என இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: “வெற்று பட்ஜெட் அல்ல வெற்றி பட்ஜெட்...” வேளாண் பட்ஜெட் மீதான விமர்சனங்களுக்கு அமைச்சர் வினோத் பதிலடி...!
இளைஞர்களின் எழுச்சியையும் ஆற்றலையும் போற்றும் வகையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இந்த வாழ்த்துப் பதிவு, சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: “இந்த மூன்றும் இருந்தால்...” - சி.எம்.மை நோக்கி அமைச்சர் மரிய வில்சன் செய்த செயல்... அவையே அதிர்த்த தருணம்...!