×
 

த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

பனையூர் கட்சி அலுவலகத்தின் வெளியே மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் காத்திருந்தனர்

சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, கட்சியின் பனையூர் தலைமை அலுவலக வளாகம் புதிய உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பெருங்கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து த.வெ.க.வில் இணைந்து வரும் நிலையில், அலுவலகத்தின் முன் வளாகத்தில் ஏராளமானோர் நீண்ட நேரமாகக் காத்திருக்கும் காட்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து த.வெ.க.வின் பனையூர் அலுவலகம் அரசியல் நடவடிக்கைகளின் மையமாக மாறியுள்ளது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய அரசு நிர்வாகத்துக்கான தயாரிப்பு பணிகள், மாவட்டச் செயலாளர்கள் நியமனம், கொள்கை வகுப்பு ஆகியவை தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், பல்வேறு கட்சிகளிலிருந்து வரும் இணைப்புகள் அலுவலகத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளன. 

இணைந்து வருபவர்களில் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், உள்ளூர் நிர்வாகிகள் ஆகியோர் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றனர். சிலர் தங்கள் கட்சியின் கொள்கைகளுடன் த.வெ.க.வின் சமூக நீதி, மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறை ஒத்துப்போவதாகக் கூறி இணைந்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி... அதிகாரி போல் ஆய்வு செய்ததால் சர்ச்சை...!

இன்று தமிழக வெற்றி கழகத்தின் பனையூர் அலுவலகத்தில் ஏராளமான குவிந்துள்ளனர். அலுவலகத்தின் நுழைவு வாயில் திறக்கப்படாத நிலையில் முண்டியடித்துக் கொண்டு கதவுகளின் வெளியே மாற்றுக் கட்சியினர் காத்திருக்கின்றனர். பிறகு கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் தொண்டர்கள் பூங்கொத்துகளுடன் சீறிப்பாய்ந்து கொண்டு கட்சி அலுவலகத்திற்குள் புகுந்தனர். 

இதையும் படிங்க: "உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share