×
 

சென்னை பார்க் ஸ்டேஷனில் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கும் போராட்டம்... மின்சார ரயில் மீது பாய்ந்த நபரால் பரபரப்பு..!!

சென்னை பார்க் ஸ்டேஷனில் ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு போராட்டத்தின் போது ரயில் முன் ஒருவர் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மே 17 இயக்கத்தினர் ஹிந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை முன்னெடுப்பது தமிழ்நாட்டின் நீண்டகால மொழி உரிமைப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவும், மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான தீவிர எதிர்ப்பாகவும் அமைந்துள்ளது. இந்த இயக்கம், திருமுருகன் காந்தி போன்ற தலைவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழ் மொழியின் ஆதிக்கத்தையும், தமிழர்களின் அடையாளத்தையும் காக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது.

பொதுவாக, இந்திய அரசின் பல்வேறு கொள்கைகள் மூலம் இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகள் தொடர்ந்து வருவதை இந்த இயக்கம் கடுமையாக எதிர்க்கிறது. குறிப்பாக தென்னக ரயில்வேயில் உள்ள ரயில் நிலையப் பெயர்ப்பலகைகள், சாலை அறிவிப்புகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி எழுத்துக்களும் இடம்பெறுவதை இவர்கள் ஆதிக்க மொழியின் திணிப்பாகக் கருதுகின்றனர்.

இதனால், இந்தி எழுத்துக்களை கருப்பு வண்ணம் பூசி அழிப்பது அல்லது மறைப்பது போன்ற நடவடிக்கைகளை அவர்கள் போராட்ட முறையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்களை அளிக்கும் போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.

இதையும் படிங்க: தொடர் சிகிச்சை... நல்லகண்ணுவின் உடல்நிலை எப்படி இருக்கு? நலம் விசாரித்த ரஜினிகாந்த்..!!

பொது போலீசார் தடுக்க முயல்வதை பார்த்த நபர் ஒருவர் மின்சார ரயில்மீது பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின தடுக்க முயன்ற போது எதிரே வந்த மின்சார ரயில் மீது அந்த நபர் பாய்ந்துள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மே 17 இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் மின்சார ரயில்மீது பாய்ந்து படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. 

இதையும் படிங்க: $300 பில்லியன் மதிப்பு: அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்..!! ரிலையன்ஸ் உடன் கைகோர்த்த டிரம்ப்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share