மக்களே கவனிங்க... பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்..! ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..!
பருவதமலை ஏறும் பக்தர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பர்வதமலை என்பது பக்தர்களுக்கு மிகவும் புனிதமான இடமாக விளங்குகிறது. இங்கு உள்ள சிவன் கோயிலுக்கு மலை ஏறி செல்வது பலருக்கும் ஆன்மீக பயணமாக இருக்கிறது. ஆனால் சமீப காலமாக மலை ஏறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விபத்துகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் எழுந்தன. இதனால் வனத்துறை மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் சில முக்கியமான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மிக முக்கியமான மாற்றம், மலை ஏற அனுமதிக்கப்படும் நேரம். இனி பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் மாலை 1 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு மேல் எந்த நேரத்திலும் மலை ஏறும் பாதை மூடப்பட்டிருக்கும். இந்த நேர வரம்பு பக்தர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இரவு நேரத்தில் அல்லது மாலை பிறகு ஏறுவது ஆபத்தானது.
குறிப்பாக இருள் மற்றும் வழுக்கும் பாறைகள் காரணமாக பல விபத்துகள் நடந்துள்ளன. மேலும், உடல்நலம் மற்றும் வயது சார்ந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 18வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதேபோல் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற கடுமையான உடல்நல பிரச்சினைகள் உள்ளவர்களும் ஏற அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புராதன கோவில்களில் இனி ஒரு செங்கல் கூட வைக்க முடியாது! ஆணையம் அமைக்க தாமதம் செய்த அரசுக்கு உயர் நீதிமன்றம் தடை!
இந்த விதிகள் பக்தர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டவை. ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 18 வயது முதல் 60 வயது உள்ளவர்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 200 பேருக்கு மலையேற அனுமதி வழங்கப்படும் என்றும் நாள் ஒன்றுக்கு, இதர மாவட்டங்களை சேர்ந்த 800 பேர் இணைய வழியில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் எனவும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள்..!! பிப். இறுதிக்குள் இயக்க முடிவு..!!