வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலுக்கு நடைபெற்ற பாலாலயம்.. நீதிமன்ற உத்தரவையும் மீறி சலசலப்பு.. அதிரடி காட்டிய போலீசார்!

கோவையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி நடைபெற்று வந்த பழமை வாய்ந்த அம்மன் கோயில் திருப்பணிகளை அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தேவேந்திர வீதியில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலானது 30 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணி செய்யாமல் மிகவும் சிதிலமடைந்து இருந்துள்ளது. இக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு தலைவர் மனோகரன் சார்பில் இந்து சமய அறநிலையத்துறையில் பழைய திருக்கோவிலை அகற்றி புதிய திருக்கோயில் திருப்பணிக்கான முழு உத்தரவுகள் பெறப்பட்டது.

மேலும் திருப்பணிகளின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை நடைபெறாமல் இருக்க , காவல்துறை பாதுகாப்பு வழங்கிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு திருக்கோயில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், திமுக பிரமுகர் உள்ளிட்ட  அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் பாலாலயம் நடைபெறுவதை தடுத்து நிறுத்தினர்.

இதையும் படிங்க: சிங்கிபுரம் கோயில் திருவிழா: களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்… அடக்கிய வீரர்கள்…!

இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து கோவிலில் பாலாலயம் நடத்த வேண்டும் என கோவில் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசாருடன் விரைந்த அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்  பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி பாலாலயம் நிகழ்வு நடைபெற்றது. நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி ஒரு சிலர் தடுத்து நிறுத்தியதால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: திருச்சி உக்கிரமாகாளியம்மன் கோயில் தேர் திருவிழா.. 100 ஆடுகள் பலியட்டு  சாமி தரிசனம் செய்த பக்தர்கள்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी