ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு..! இன்றைய தினம் புதிய துவக்கம்... பியூஷ் கோயல் உற்சாகம்..!!
அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தடைந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இழுபறி தற்போது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக அணி தனது கூட்டணி பேச்சுவார்த்தைகளை வேகமாக முடித்து வரும் நிலையில், அதிமுக தலைமையிலான NDA அணியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுகள் இன்னும் முழுமையடையாமல் தாமதமாகி வருகிறது. இதனால் கூட்டணி கட்சிகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. முதன்மையான இழுபறி அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நிலவுகிறது.
தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக சென்றிருந்தார். தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்த அழைப்பை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் டெல்லி சென்றனர். அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டை அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி பேசி முடித்ததாக கூறப்படும் நிலையில் இன்று கையெழுத்தாகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் பியூஷ் கோயலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய பியூஷ் கோயல், தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கான முடிவுரை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லிக்கு பறந்த TTV, அன்புமணி..! பியூஷ் கோயலின் சென்னை பயணம் திடீர் ரத்து...!!
தமிழ்நாட்டில் திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை நிறுத்துவதற்காக அதிமுக - பாஜக இணைத்து கூட்டணி அமைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக அவர் கூறினார். தமிழ்நாட்டு அரசியலில் இன்றைய தினம் புதிய துவக்கம் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!