பியூஷ் கோயல் சென்னை வருகை... ஏர்போர்ட்டில் குவிந்த பாஜகவினர்... உற்சாக வரவேற்பு...!
தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகை தந்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் உத்திகளை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நியமித்து பாஜக தேசிய தலைமை அறிவித்தது. மத்திய இணை அமைச்சர்கள் இருவர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அர்ஜுன் மேக்வால், முரளிதர் மோஹால் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
பியூஷ் கோயல் இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாவார். 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் இருந்துள்ளார். இந்த முறையும் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.
இதையும் படிங்க: தொடங்கியது கவுண்டவுன்!! அமெரிக்க செயற்கோளை சுமந்தபடி நாளை விண்ணில் பாய்கிறது பாகுபலி!
சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பியூஷ் கோயலுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். சென்னை வந்துள்ள பியூஷ் கோயல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க இருக்கிறார். அதிமுக விடம் 50 தொகுதிகளை பாஜக கேட்டிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. அப்போது முப்பது தொகுதிகள் தருவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில், பியூஷ் கோயல் - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பின்போது தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹாப்பி கிறிஸ்துமஸ்!! கொண்டாட்டத்துக்கு தயாராகும் சென்னை! 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!