×
 

சித்திரை முழு நிலவு மாநாடு.. மாமல்லபுரத்தில் குவியும் பாமக தொண்டர்கள்.. நிறைவேற்றப்பட போகும் தீர்மானங்கள் என்ன?

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று நடைபெறுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு இன்று மாலை பிரமாண்டமாக துவங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஈசிஆர் சாலையில் திருவிடந்தையில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1.80 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இருந்து பாமக தொண்டர்கள் மாநாட்டில் திரளாக பங்கேற்க திரண்டு உள்ளனர்.


தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே அனைத்து பகுதிகளிலும் நிகழ்ச்சியை காண 3 இடங்களில் ராட்சத எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல, 40-க்கு 20 உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 2 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என்பதால், எந்தவித அசம்பாவிதமும் நடந்திடக் கூடாது என்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. யாருக்கும் காயம் ஏற்பட்டாலோ, வேறு ஏதும் மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ அவர்களுக்கு உதவுவதற்காக மாநாட்டு திடலில் 15 ஆம்புலன்ஸ்களும், மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது.

மாநாட்டு திடலில் வன்னியர் சங்கம் உருவானது முதல் தற்போது வரையிலான வரலாற்று தொகுப்பு புகைப்பட காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதேபோல, மாநாட்டு திடலுக்கு வருபவர்களின் வசதிக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செயப்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க: பாமக வாகனங்களுக்கு தடை - 13 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை மறக்காத காவல்துறை...!

அதிகப்படியான வாகனங்களின் வருகையால் கிழக்கு கடற்கரை சாலையில் 5 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன. மாநாடு துவங்கி நடைபெற்று வரும் நிலையில் வாகனங்களில் இருந்து தொண்டர்கள் இறங்கி சாலையில் நடந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சில அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் அனைவரும் போலீசார் சொல்வதை கடைப்பிடிக்க வேண்டும். மாநாட்டுக்கு வரும் போதும் சரி, மாநாடு முடிந்து வீடு திரும்பும்போது சரி அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். போலீசாரின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும் அமைதியாக பத்திரமாக வீடு திரும்பவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் மாநாடு துவங்கியது. மாநாட்டு திடலில் வன்னியர் சங்கம் உருவானது முதல் தற்போது வரையிலான வரலாற்று தொகுப்பு புகைப்பட காட்சிகள் இடம் பெற்றது. ஆரம்பத்தில் புஷ்பவனம் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடந்தது தொடர்ந்து, வன்னிய வள்ளல்கள் தியாகிகள் என்ற குறும்படமும் ஒளிபரப்பப்பட்டது. 

மாலை 6 மணியளவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாநாட்டு திடலுக்கு வந்தார். பாமகவின் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவது, பெண்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும், மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்'..! பாக்., விவகாரத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா விடுத்த எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share