×
 

CM விஜய் காட்டும் நிர்வாக வேகம்! சென்னையில் அதிரடி..! 5 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!

சென்னையில் ஐந்து காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து காவல்துறையில் குறிப்பிடத்தக்க நிர்வாக மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவர் பதவியேற்ற உடனேயே உள்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளைத் தானே வைத்துக் கொண்டு நேரடி மேற்பார்வை செய்யத் தொடங்கினார்.

இதன் ஒரு பகுதியாக, முந்தைய ஆட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளை மாற்றியமைத்தல், உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் புதிய நியமனங்கள், மற்றும் சில அதிகாரிகளைப் புதிய பதவிகளுக்கு அனுப்புதல் போன்ற நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. காத்திருப்போர் பட்டியல் என்பது பொதுவாக அதிகாரிகளை தற்காலிகமாக பணியிலிருந்து ஒதுக்கி வைக்கும் அல்லது புதிய பதவி வரும் வரை காத்திருக்கச் செய்யும் நடைமுறை.

இது சில சமயங்களில் தண்டனைக்கு சமமானதாகவும், சில சமயங்களில் நிர்வாக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவும் பயன்படுத்தப்படுகிறது. விஜய் முதலமைச்சரான பின்னர், தேர்தல் ஆணையம் முன்பே காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்த சில மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டன. இது ஒருபுறம் முந்தைய அரசுடன் நெருக்கமாக இருந்ததாகக் கருதப்பட்ட அதிகாரிகளை மறுபகிர்வு செய்யும் நடவடிக்கையாகவும், மறுபுறம் நிர்வாகத்தை மேம்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: நைட் 10 மணிக்கு மேல போலீஸ் பண்ற காரியமா இது?... குண்டுக்கட்டாய் தூக்கி கைது செய்த சக காவலர்கள்...!

இந்த நிலையில், சென்னையில் ஐந்து காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் அபிம் தினேஷ் மோதக் இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல் ஆய்வாளர்கள் ரமேஷ், கிருபாநிதி, புஷ்பராஜ், காதர் மீரா, கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share