×
 

கும்பி எரியுது! குடல் கருகுது! குளு குளு வாசம் ஒரு கேடா? ஸ்டாலினை கிழித்த பொள்ளாச்சி ஜெயராமன்..!

தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நேரத்தில்குளு குளு வாசம் ஒரு கேடா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஊட்டி ஓய்வு பயணம் குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம் செய்தார்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், ஆண்டுதோறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மே 15-ஆம் தேதி தொடங்கி, 25ஆம் தேதி வரை கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 15ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக 5 நாட்கள் பயணமாக இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் அவர், சாலை வழியாக உதகைக்குச் செல்கிறார். 

அங்கு பொதுமக்களுக்குப் பட்டா வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொள்ளவுள்ளார். இதையடுத்து தொட்டபெட்டாவில் பழங்குடியின மக்களை சந்தித்தும் முதலமைச்சர் உரையாடவுள்ளார். இது போல, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதலமைச்சர், மே 16 அல்லது 17-ஆம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திராவிட கொத்தடிமையா? உழைப்பு, விசுவாசத்துக்கு கிடைத்தது பதவி.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ரகுபதி..!

இந்த நிலையில் முதலமைச்சரின் ஊட்டி பயணத்தை விமர்சித்து அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்து உள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 71 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அக்கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் பிரசித்தி பெற்ற லஷ்மி நரசிம்மர் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி நீண்ட ஆயுளுடன வாழ வேண்டியும் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பொறுப்பேற்க வேண்டிய சிறப்பு ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது.

இதில் முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்த்தார். அதில், தமிழகத்தில் தனியாக இருக்கும் வயதான முதியவர்களை
குறிவைத்து  தினந்தோறும் சித்திரவதை செய்து கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

தமிழகப் போலீஸ் அதைப்பற்றி கவலைப்படவில்லை. மௌனமாக இருக்கிறது. என்ன காரணம்? என்று தெரியவில்லை? சென்னிமலையில் தொடங்கி காங்கேயம், பல்லடம், தற்போது சேலம் வரை தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த கொடூர கொலைகள், ஒரே மாதிரியான நடைபெறும் இந்த சம்பவங்களை தடுப்பதற்கு போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். ஊட்டியில் ஓய்வெடுக்கு சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

முதலமைச்சரின் தந்தை கலைஞர் கருணாநிதி கும்பி எரிகிறது!  குடல் கருகுகிறது! குளுகுளு வாசம் ஒரு கேடா? என்றார் நாடு முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு கட்டப் பஞ்சாயத்து, வம்பு வழக்குகள் தினமும் பெருகிவரும் நேரத்தில் நாடெல்லாம் கொலை கொள்ளை நடக்கிறது குளுகுளு வாசம் ஒரு கேடா? என பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார். முதலமைச்சரின் ஊட்டி பயணம் குறித்து விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: அன்னையின் தியாகத்திற்கு ஈடில்லை... CM ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அன்னையர் தின வாழ்த்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share