ஆபத்து..! முழு கொள்ளளவை எட்டும் பூண்டி நீர்த்தேக்கம்... கண்காணிப்பு தீவிரம்..!
கனமழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்ட உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, ஒரு கரையோர நகரமாக இருந்தாலும், அதன் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆதாரங்கள் பெரும்பாலும் உள்ளூர் ஏரிகளையும் நீர்த்தேக்கங்களையும் சார்ந்தே உள்ளன. அத்தகைய முக்கியமான நீர்நிலைகளில் ஒன்று தான் பூண்டி நீர்த்தேக்கம். திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த நீர்த்தேக்கம், சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்கும் முதன்மை ஆதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
சென்னையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில், பூண்டி என்ற சிறிய ஊரில் அமைந்துள்ளது. கொற்றலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இது, மழைநீர் மற்றும் கிருஷ்ணா ஆற்றிலிருந்து வரும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் தன்மையுடையது. அணையின் நீளம் சுமார் 1.3 கிலோமீட்டர்கள், உயரம் 15.24 மீட்டர்கள், அதன் மொத்த திறன் 3.23 டிஎம்சி.
தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கி தீவிரமடைந்துள்ள நிலையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. பாதுகாப்பு கருதி தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பூண்டி நீர்த்தேக்கம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வேகமாக நீரின் அளவு உயர்ந்து வரும் நிலையில் முழு கொள்ளளவு எட்ட உள்ளது.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ் பகுதி... சும்மா வெளுக்க போகுது... தப்புமா தமிழகம்?
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு வரும் நீரின் அளவு 2500 கன அடியாக அதிகரித்துள்ளது. 35 அடி முழு கொள்ளளவு கொண்ட பூண்டி நீர் தேக்கத்தின் நீர்மட்டம் 33 அடியை தாண்டியுள்ளது. முழு கொள்ளளவை எட்டு உள்ளதால் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடக்கம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!