ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ் பகுதி... சும்மா வெளுக்க போகுது... தப்புமா தமிழகம்?
ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகுவதால் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருந்து விலகியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு இயல்புக்கு அதிகமாக வடகிழக்கு பருவ மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 19ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் இந்த ஆண்டு வடகிழக்க பருவமழையின் போது இயல்பை விட மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நடப்பாண்டுக்கான வடகிழக்கு பருவ மழை தொடர்பான அறிவிப்பில் தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,வடகிழக்கு அரபிக்கடலில் கேரளா-கர்நாடகா கடற்கரை இடையே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வலுப்பெறலாம் என்றும் கணிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே நேரம், தென்கிழக்கு வங்கக்கடலில் அக்டோபர் 24ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #weatherupdate: குடை கொண்டு போங்க மக்களே...வெளுக்க போகுது மழை... 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!
காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையும் என்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்.. 3 நாட்களுக்கு பேய் மழை இருக்காம்...!