×
 

பெண்களுக்கு FREE... பொருநை அருங்காட்சியகத்திற்கு நாளை முதல் பேருந்து சேவை... போக்குவரத்து கழகம் அறிவிப்பு...!

பொருநை அருங்காட்சியகத்திற்கு நாளை முதல் பேருந்து சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருநை அருங்காட்சியகம் தமிழகத்தின் தொன்மையான நாகரிகத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு முக்கியமான அடையாளமாக உருவெடுத்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் பண்டைய பெயரான பொருநை எனும் பெயரில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட்டியார்பட்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வளாகம், தமிழர்களின் ஆதி நாகரிகத்தின் தொட்டிலாகக் கருதப்படும் பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தைப் பிரதிபலிக்கிறது.

இங்கு காட்சிப்படுத்தப்படும் தொல்பொருள்கள் தமிழர்களின் செழுமையான வாழ்க்கை முறையை விவரிக்கின்றன. வெண்கலப் பாத்திரங்கள், இரும்பு ஆயுதங்கள், சிகப்பு-கருப்பு பானைகள், அரிய மணிகள், தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், செம்பு - இரும்பு மோதிரங்கள், வளையல்கள், அரவைக் கற்கள் போன்றவை அன்றைய தொழில்நுட்பம், வாணிபம், கலை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகின்றன. பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பொதுமக்கள் அனைவரும் பொருநை மற்றும் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், நாளை முதல் பொதுமக்கள் பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக பொருநை அருங்காட்சியகத்திற்கு நாளை முதல் பேருந்து சேவை தொடங்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை பயணம்: 65 கோடியில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா!

பொருநை அருங்காட்சியகத்திற்கு செல்லும் சிறப்பு பேருந்தில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பொருநை அருங்காட்சியகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில் புதிய பேருந்து சேவை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க: தலை விரித்தாடும் போதை கலாச்சாரம்... என்ன முதல்வரே கண்ணுக்கு தெரியலையா? ஆர். பி. உதயகுமார் விளாசல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share