×
 

CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.

மக்கள் விரும்பும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடரப்பட வேண்டும் என்பதை தேமுதிக நிலைப்பாடு என சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். திட்டங்களின் பெயர்களை மாற்றங்கள்., மாற்றாதீர்கள்… ஆனால் திட்டங்கள் தொடரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவர்களுக்காக தொடரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மழை பெய்யத் தொடங்கிய நிலையில் திறந்தவெளியில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து முளைக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆட்சியில் மூன்று நாளில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது என்றும் ஆனால் புதிய அரசு என்பதால் தாமதம் என நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார். நெல் கொள்முதலில் தாமதம், கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் கிடங்குகளுக்கு எடுத்து செல்லப்படாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஏற்று கூலி, இறக்கு கூலி கொடுத்தும் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருக்கிறார். நீர் மேலாண்மையில் தமிழ்நாடு தண்ணீரை பெற வேண்டும் என கூறியிருக்கிறார். நீருக்காக யாரிடமும் கையேந்தாத நிலைக்கு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் அனைத்துக் கட்சியினரையும் அழைத்து சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்றார். காவிரி நமது உரிமை, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, இதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். முதல்வர் வலிமையான முடிவெடுக்க வேண்டும் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், விவசாயிகளுக்காக எதிர் கட்சியினர் அனைவரும் ஓரணியில் இருப்போம் என கூறினார். மேகதாது, காவிரி விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் சந்தித்து பேசினால் என்ன என்று பிரேமலதா விஜயகாந்த் கேட்டுள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல முதல்வர் விஜய் முடிவெடுத்தது சரிதான் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

டி கே சிவகுமாரும், விஜயும் இரு மாநிலத்தின் புதிய முதல்வர்கள் என்றும் பேசினால் என்ன என்றும் ஏன் தடுக்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார். முதல்வர் கர்நாடகா செல்லும் போது அவமரியாத ஏற்பட்டால் என்ன செய்வது என்கிறார்கள் என்றும் அப்படி நடக்க நாங்கள் விடமாட்டோம் எனவும் பிரேமலதா திட்டவட்டமாக தெரிவித்தார். முதலமைச்சர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா என்று கேட்டுள்ளார். விருகம்பாக்கம் பகுதியில் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை எடுத்தார். 

 

இதையும் படிங்க: சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share