×
 

அப்பாடா..! சொத்து வரி உயர்வு என்பது வதந்தி.. தமிழக அரசு அறிவிப்பால் மக்கள் நிம்மதி..!

நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6% சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இது தொடர்பாக விளக்கம் அளித்த தமிழக அரசு சொத்துவரி மீண்டும் உயர்த்தப்படுகிறது என்பது வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு கூறியிருப்பதாவது; நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை என்றும் சொத்து வரி மீண்டும் 6 சதவீதம் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் கூறியுள்ளது. 

இதையும் படிங்க: ஜூன் 1ல் திமுக பொதுக்குழு கூட்டம்! அடுத்தடுத்து நிறைவேறிய அதிரடி தீர்மானங்கள்..!

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆறு சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது அதன் பிறகாக சொத்துவரி உயர்த்தப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. மேலும் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் சொத்து வரி உயர்த்தப்படுவதாக வெளியான தகவல் வதந்தி எனக் கூறி உள்ளது.

இதையும் படிங்க: பாஜகவின் அடக்குமுறைக்கு அடிப்பணிந்தார் எடப்பாடியார்! சரமாரியாக விளாசிய முதலமைச்சர்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share