அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!
குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட செனையக்குடி கிராமத்தைச் சேர்ந்த வித்யாவுக்கு தலை பிரசவத்தில் அறுவை சிகிச்சை முறையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இரு வேறு கர்ப்பிணிகளுக்கு பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளை பணியில் இருந்த செவிலியர் ஒருவர் மாற்றி காண்பித்ததால் சர்ச்சை, இதனால் உறவினர்களிடையே எழுந்த கூச்சல் குழப்பத்தால் பரபரப்பு, சம்பவ இடத்திற்கு சென்ற ஆட்சியர், அமைச்சர், எம்எல்ஏ, மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை, குழந்தைகளின் பெற்றோருக்கு சந்தேகம் இருந்தால் டிஎன்ஏ பரிசோதனை செய்ய கோரிக்கை வைத்து பரிசோதனை மேற்கொள்ளலாம் என்றும் இந்த விவகாரத்தில் தவறு செய்த நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தகவல்
புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தினசரி 20 முதல் 30 குழந்தைகள் பிறப்பது வழக்கம். இதனால் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் இந்த மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் அதிகளவு சென்று பிரசவம் பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள குப்பையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைமதி என்ற (25) வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு தலை பிரசவத்தில் அறுவை சிகிச்சை முறையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதையும் படிங்க: “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?
அதேபோல் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட செனையக்குடி கிராமத்தைச் சேர்ந்த வித்யாவுக்கு தலை பிரசவத்தில் அறுவை சிகிச்சை முறையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் முதலில் கலைமதிக்கு அறுவை சிகிச்சை முறையில் பிறந்த பெண் குழந்தையை
குழந்தைகள் வார்டில் பணி புரியும் செவிலியர் தையல்நாயகி என்பவர் வித்யாவுக்கு பிறந்த குழந்தை என்று எண்ணி குழந்தைக்கு பேபி டாக், டிஸ்க் என் என்ற அடையாள எண் அணிவித்து வித்யாவின் உறவினர்களிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் கலைமதியின் உறவினர்களும் நின்று இதனை கவனித்துள்ளனர்.
பின்னர் வித்யாவுக்கு நடைபெற்ற பிரசவத்தில் அவருக்கு பிறந்த ஆண் குழந்தையை மருத்துவர் இதை வித்யாவின் உறவினர்களிடம் கொண்டு சென்று கொடுங்கள் என்று தெரிவித்த போது அதிர்ச்சி அடைந்த செவிலியர் தையல்நாயகி தவறு செய்து விட்டோம் என்று எண்ணி உடனடியாக வெளியே சென்று வித்யா உறவினர்களிடம் கொடுத்த கலைமதியின் பெண் குழந்தையை அவசர அவசரமாக வாங்கி வந்து அந்தக் குழந்தைக்கு அணிவிக்கப்பட்ட பேபி டாக் அடையாள எண் ஆகியவற்றை மாற்றி வித்யாவுக்கு பிறந்தது ஆண் குழந்தை என்றும் கலைமதிக்கு பிறந்தது பெண் குழந்தை என்றும் தெரிவித்து குழந்தைகளை அவரவர் உறவினர்களிடம் கொடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கலைமதியின் உறவினர்கள் கலைமதிக்கு பிறந்தது ஆண் குழந்தை தான் என்றும் மற்றொரு கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தையை தங்கள் குழந்தை என்று கொண்டு வந்து கொடுப்பதாகவும் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை நகர காவல் துறையினர் வந்தனர்.
அப்போது தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு திடீர் ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது இந்த பிரச்சனை அவரது கவனத்திற்கு வர உடனடியாக மாவட்ட ஆட்சியர் அருணா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆகியோரை வரவழைத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அப்போது நடந்த விசாரணையில் கலைமதிக்கு பிறந்தது பெண் குழந்தை தான் என்றும் வித்யாவுக்கு பிறந்தது ஆண் குழந்தை தான் என்றும் குழந்தைகள் வார்டில் இருந்த செவிலியர் கவனக்குறைவாக குழந்தைகளை மாற்றி காண்பித்ததால் இந்த சர்ச்சை ஏற்பட்டதாகவும் குழந்தை பிறந்த உடனேயே இரண்டு குழந்தையின் தாய்களிடம் அவர் அவர்களின் குழந்தைகளை காண்பித்தது தெரியவந்தது.
இந்நிலையில் கலைமதியின் உறவினர்கள் தொடர்ந்து கலைமதிக்கு பிறந்தது என்ன குழந்தை என்று தெரிய வேண்டும் அதனால் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்தனர்.
பின்னர் மருத்துவமனையில் இருந்து அமைச்சர் முகமது பர்வேஸ், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் புறப்பட்டு சென்ற நிலையில் இது தொடர்பாக மருத்துவ கல்லூரி முதல்வர் வட்டாட்சியர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.
இதையும் படிங்க: விடிந்ததுமே அதிரடி ஆக்ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!