காலுக்கு தான் குறி.. ஆனா மண்டை ஒடஞ்சி போச்சு! மகனை தந்தையே கொலை செய்த கொடூரம்..!
புதுக்கோட்டையில் இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தந்தையே மகனை அடித்து கொலை செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியில் இளைஞர் ஒருவர் வீட்டின் மாடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தயது. கணேசன் என்பவர் மதுபோதையில் அவரது வீட்டில் மொட்டை மாடியில் தூங்குவதற்காக சென்றுள்ளார்.
காலை வெகுநேரமாகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மகன் மோகன்தாஸ் மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது தந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து சடலமாக கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து குடும்பத்தினருக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு முதற்கட்ட விசாரணையை கணேசனின் குடும்பத்தார்களிடமிருந்தே காவல்துறையினர் தொடங்கினர்.
இதையும் படிங்க: #BREAKING: ED இல்ல மோடியே வந்தாலும் பயப்பட மாட்டோம்.. துணை முதல்வர் உதயநிதி தடாலடி!!
இதில், கணேசனின் தந்தை கிருஷ்ணன் கொலை செய்தது தெரியவந்தது. தினமும் மதுபோதையில் தகராறு செய்து வந்ததால் ஆத்திரத்தில் தாக்கியதாகவும், உடல் முழுவதும் போர்வை போட்டு உறங்கி கொண்டு இருந்ததால், தலை எது, கால் எது என தெரியவில்லை என்றும் காலை தான் குறிவைத்து தாக்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் கிருஷ்ணனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையே மகனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வடகாடு தாக்குதல் சம்பவம்.. ஆட்சியரை வெளுத்துவாங்கிய கோர்ட்..!