×
 

அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

பிரச்சார பயணத்தில் தோல்வி வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் ரகுபதி வசனம் செய்தார்.

அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எந்த ஆட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் எப்போதும் போதை பொருள் தொடக்கம் இருக்கிறது என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் எங்கும் போதைப்பொருள் உற்பத்தி நடைபெறவில்லை என்றும் குஜராத்தில் இருந்து தான் வருகிறது எனவும் தெரிவித்தார். போதைப் பொருள் சப்ளையர்களை அதிமுக வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்ட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுகவை விட சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டு மக்கள் பாதுகாப்போடு இருக்கிறார்கள் என்றும் திமுக ஆட்சியை குறித்து பேசினார். 80 சதவீத பெண்கள் திமுக கூட்டணிக்கு தான் வாக்களிக்கப் போகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பத்து ஆண்டுகால ஆட்சியை விட சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டு இருப்பதாகவும் கூறினார். அதிமுக என்ற கட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பதால் பதவியை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவி மட்டும் போதும் என எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதாகவும் பிரச்சார பயணத்தில் தோல்வி கண்ட ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அதை இபிஎஸ் தான் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விவசாய நண்பன் போல் கபட நாடகம்... பிரதமரை வறுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி..!!

பெண்கள் தைரியமாக இருப்பதால்தான் குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க முன் வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். பெண்கள் மீது எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீர் பாசம் வந்திருப்பதாகவும் திமுக கூட்டணிக்கு 80 சதவீத பெண்கள் ஆதரவு இருப்பதை தெரிந்து கொண்டு அதை தடுக்க சதி நடப்பதாகவும் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற போலி நாடகத்தை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். 

இதையும் படிங்க: “விஜய் அமித்ஷாவின் ஸ்லீப்பர் செல்” - தவெகவிற்கு சம்மட்டி அடி... ஒரே போடாய் போட்ட ரகுபதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share