×
 

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை... தடையில்லா மின்சாரம்!... தமிழக அரசு உத்தரவு...!

மழைக்காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனிடையே மின்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார். சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின் பகிர்மான கட்டுப்பாட்டு அறை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், போதிய தளவாடங்கள் இருப்பு வைத்திருப்பது, மின்தடை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய விரைவான மின்சார விநியோக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

பணியாளர்களும் அலுவலர்களும் சுழற்சி முறையில் பணி செய்ய வேண்டும் என்றும் மாநில அளவில் மின்சார தளவாடப் பொருட்கள் உடனுக்குடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எடுத்துச் செல்ல குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பாதுகாப்புடன் கூடிய தடையில்லா மின்வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் மரங்கள் மின்சார கம்பங்கள் மீது விழுந்து சேதம் அடையும் போது கவனத்துடன் மற்றும் பாதுகாப்புடன் செயல்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் 

இதையும் படிங்க: உஷார்... அடிச்சு நகர்த்த போகுது... 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!

மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையினர், களப்பணி குழுக்கள், உள்ளிட்டவற்றின் விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மின்தடை புகார்களை 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: #weatherupdate: வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி ... வானிலை மையம் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share