#weatherupdate: வெளுக்க போகுது மழை... 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை, இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களையும், இலங்கை, மாலத்தீவுகள் போன்ற அருகிலுள்ள பகுதிகளையும் ஒருங்கிணைத்த முக்கியமான பருவநிலைக் காலம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழை மாநிலத்தின் ஆண்டு மழையளவில் சுமார் 48% முதல் 50% வரை பங்களிக்கிறது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற கடலோர மாவட்டங்கள் இந்த மழையால் அதிகம் பயனடைகின்றன. இருப்பினும், இந்த மழை சில நேரங்களில் புயல்கள் மற்றும் வெள்ளப் பெருக்குகளை ஏற்படுத்தி பெரும் சேதத்தையும் உண்டாக்குகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் வடகிழக்க பருவமடை இன்று முதல் தொடங்கியது என அறிவித்தார். வடகிழக்கு பருவமழை காரைக்கால் பகுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
நடப்பாண்டு 50 சென்டிமீட்டர் அளவுக்கு வடகிழக்கு பருவமழை இருக்கும் என்றும் இயல்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16 முதல் 18ஆம் தேதிகளில் தென்மேற்கு பருவ மழை விலக சாத்திய கூறுகள் உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: #weatherupdate: குடை கொண்டு போங்க மக்களே...வெளுக்க போகுது மழை... 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, மதுரை, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. திண்டுக்கல், திருச்சி, நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்குள் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மறுநாள் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: RAIN ALERT: குடை எடுத்தாச்சு... 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை...!