#rainalert: வெளுக்க போகுது மழை... குடை எடுத்தாச்சு... 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவ மழை முழுவதுமாக விலகிவிடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி, செங்கல்பட்டு, சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், குமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர், திருவண்ணாமலை, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு பரவலாக கனமழை பெய்யும் என்றும் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #weatherupdate: வெளுக்க போகுது மழை... 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!
மேலும் தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தென்காசி, நெல்லை கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை மறுநாள் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #weatherupdate: குடை கொண்டு போங்க மக்களே...வெளுக்க போகுது மழை... 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!