×
 

அடிச்சு நகர்த்தபோகுது மழை! 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வரும் 25ஆம் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு பாத்திர எடுத்து சாய்ந்து பகுதி உருவாகும் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டு உள்ளது. 

நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 12 செ.மீ மழை, ஈஞ்சம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ மழை, அடையாரில் 10 செ.மீ மழை, பள்ளிக்கரணை, கண்ணகி நகர், மேடவாக்கம் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை, சைதாப்பேட்டை, நீலாங்கரை ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை, வேளச்சேரி, அண்ணா பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழை பதிவாகி உள்ள வானிலை ஆய்வு மையத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

இதையும் படிங்க: இதோ வந்துட்டான்ல... வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் கனமழை

இந்த நிலையில் தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 26 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை! குடை கொண்டு போங்க மக்களே...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share