×
 

10.5% இட ஒதுக்கீட்டில் உறுதி..! போராட்டம் தமிழக அரசின் கையில் தான் உள்ளது.. ராமதாஸ் எச்சரிக்கை..!

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கொடுக்காவிட்டால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க.வின் வன்னியர் சங்கத்தின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வன்னியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. வன்னியர் சங்கத்தில் 91 மாவட்ட செயலாளர்கள், 91 தலைவர்கள் உள்ளனர். ஒரு மாவட்டத்துக்கு ஒரு தலைவர், ஒரு செயலாளர், 2 துணை செயலாளர்கள், 2 துணை தலைவர்கள் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில், வன்னியர் சங்க கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதனிடையே, தைலாபுரம் தோட்டம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வன்னியர்களுக்கு 10 புள்ளி 5% இட ஒதுக்கீடு கொடுக்காவிடில் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஷாக் அடிக்க போகுதா மின் கட்டணம்.? ஜூலை முதல் கட்டணம் உயர்வு..? திமுக அரசை வறுத்தெடுக்கும் ராமதாஸ்.!!

கடுமையான போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பது தமிழக அரசின் கைகளில் தான் உள்ளது என கூறினார். வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக பேசிய ராமதாஸ் இவ்வாறு தெரிவித்தார். கட்சிப் பதவியில் மாற்றம் இருக்கிறதா என்ற கேள்விக்கு எப்போதும் இருப்பது போல பாமக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: நான் துரோகம் செய்ய மாட்டேன்! சீக்கிரமே ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு... ஜி.கே. மணி உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share