×
 

மாட்டிக்கினியே பங்கு..! தை மாத சுப தினம்... தப்பு தப்பாக மந்திரம் சொன்ன புரோகிதர்... திதி கொடுக்க வந்தவர் ஷாக்..!

தை அமாவாசையை ஒட்டி திதி கொடுக்க சென்றவர்களுக்கு, சுபயோக சுப தினம் எனக் கூறி மந்திரம் சொன்ன புரோகிதர் வீடியோ வைரலாகி வருகிறது.

தை அமாவாசை என்பது தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நாள். தை மாதம் தொடங்கும் போது சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிப்பதால், இது உத்தராயண காலத்தின் ஆரம்பமாகவும் இருக்கிறது. இந்த அமாவாசை நாளில் சூரியனும் சந்திரனும் ஒரே இடத்தில் இணைவதால், பித்ருக்களான முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிக உகந்த நேரமாக ஜோதிட சாஸ்திரங்களும் புராணங்களும் கூறுகின்றன.

நமது முன்னோர்கள் இறந்த பிறகு பித்ரு லோகத்திற்கு செல்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அங்கு அவர்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணமும் திதியும் உண்மையான உணவாகவும் நீராகவும் சென்றடைகிறது என்று நம்பிக்கை. குறிப்பாக தை அமாவாசையில் கொடுக்கும் தர்ப்பணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு என்கிறார்கள். பூமியின் ஈர்ப்பு சக்தியை மீறி, அந்த நீர் மேல்நோக்கி எழுந்து பல கோடி மைல்கள் தாண்டி பித்ரு லோகத்தை அடைகிறது என்று சொல்வார்கள்.

இதனால் முன்னோர்களின் ஆத்மாக்கள் திருப்தியடைந்து, நமக்கு ஆசி வழங்கி, குடும்பத்தில் தடைகள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருச்செந்தூர், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், காவிரி முக்கூடல் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் நேற்றைய தினம் தை அமாவாசை தினத்தை ஒட்டி ராமேஸ்வரத்தில் ஏராளமான மக்கள் திதி கொடுப்பதற்காக குவிந்தனர். இறந்த தங்களது முன்னோர்களின் ஆசியை பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக தர்ப்பணம் கொடுத்தனர்.

இதையும் படிங்க: ஒரு டிக்கெட் ரூ.7,500? நடுத்தர மக்கள் வயித்தெறிச்சல் சும்மா விடாது... நயினார் கண்டனம்..!

இறந்த தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். அதில் புரோகிதர் ஒருவரிடம் திதி கொடுக்க ஒரு குடும்பம் சென்றுள்ளது. அப்போது அந்த புரோகிதர் தப்பு தப்பாக மந்திரம் ஓதி மாட்டிக் கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக தை மாதம் சுபயோகம் கூடிய சுப தினத்தில் என்று கூறி அவர் திதி கொடுத்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவ வைரலாகி வருகிறது. தவறாக மந்திரம் சொன்னாலும் அந்த கான்ஃபிடன்ட் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்று சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தவெக கூட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பணம்.? வளர்ச்சியை பார்த்து திமுக பயப்படுதா... TVK பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share