பத்திரப்பதிவு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்... தவெக அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்...!
லஞ்சத்தை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கை தொடரும். வரி குறைப்பு குறித்து வரும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேவையான கோரிக்கைகள் மத்திய அரசிடம் வைக்கப்படும் என்றார்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சங்களை தவிர்க்க கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். லஞ்சத்தை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கை தொடரும் என
ராசிபுரத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தகவல்
ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்ச்செல்வன் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பிறகு முதன் முதலாக ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வருகை புரிந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு, கட்சியினர் அதிர்வேட்டுகள் முழங்க சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்திற்குச் சென்ற லோகேஷ் தமிழ்ச்செல்வன், கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறுகையில், கடந்த முறை அமைச்சர்களாக இருந்தவர்கள் செய்யத் தவறிய பணிகளை செய்வதோடு, தொகுதிக்கு அனைத்து வசதிகளையும் கொண்டு வருவேன்.
இதையும் படிங்க: காதுல பூ சுத்துரீங்களா? ஆதவ் பேச்சு ஆச்சரியமா இருக்கு..! தமிழிசை விமர்சனம்..!
முந்தைய அமைச்சர்கள் செய்த தவறுகளை செய்யாமல் இருப்பதோடு, ராசிபுரம் தொகுதியில் தீர்க்க முடியாமல் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முழு கவனம் செலுத்துவேன்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சங்களை தவிர்க்க கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். யாரும் லஞ்சம் வாங்க கூடாது என எச்சரிக்கை விடுத்தும், அதை பொருட்படுத்தாமல் லஞ்சம் பெற்றவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
லஞ்சத்தை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கை தொடரும். வரி குறைப்பு குறித்து வரும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேவையான கோரிக்கைகள் மத்திய அரசிடம் வைக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: அதளபாதாளத்தில் "Law & Order"... ஒரே அராஜகம்..!! தவெக ஆட்சியை வெளுத்த நயினார்..!