அடேங்கப்பா..!! நம்ம தமிழக CM-க்கு மாசம் இவ்ளோ சம்பளமா..!! அப்போ அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு..??
தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பதை பார்ப்போம்.
ஜனநாயகத்தின் அடிப்படையில் செயல்படும் இந்தியாவில், மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.)க்கு மாத ஊதியம் வழங்கப்படுகிறது. மக்களின் பிரச்சினைகளை அறிந்து தீர்வு காண களத்தில் இறங்கும் இவர்களுக்கு, அடிப்படை ஊதியத்துடன் பல்வேறு படித்தொகைகளும் வழங்கப்படுகின்றன.
எம்.பி.க்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் இருந்தாலும், எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் ஒவ்வொரு மாநிலத்தின் நிதி நிலை மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் தவெக அரசின் காலத்தில், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஊதிய விவரங்கள் மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த காலங்களில் பல முறை உயர்த்தப்பட்டுள்ள இந்த ஊதியங்கள், 2024 மே மாதம் விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி தற்போது நடைமுறையில் உள்ளன.
ஊதிய உயர்வு வரலாறு:
2008-ல் ரூ.25,000 ஆக இருந்த எம்.எல்.ஏ.க்களின் அடிப்படை ஊதியம் 2009-ல் ரூ.50,000-ஆகவும், 2011-ல் ரூ.55,000-ஆகவும் உயர்த்தப்பட்டது. 2017-ல் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இதை ரூ.1,05,000-ஆக கணிசமாக உயர்த்தியது. இந்த அளவு இன்றும் அடிப்படையாகத் தொடர்கிறது.
இதையும் படிங்க: லஞ்ச ஊழலுக்கு இடமே இல்லை: மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!
தற்போதைய ஊதிய அமைப்பு:
2024-ம் ஆண்டு விதி திருத்தத்தின்படி, முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அடிப்படை சம்பளம் ரூ.30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை பல்வேறு படித்தொகைகள் மூலம் கூட்டப்படுகிறது.
- முதலமைச்சரின் மாத ஊதியம்: ரூ.2,05,000. இதனுடன் அரசு வீடு, அதிகாரப்பூர்வ வாகனம், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு: ரூ.1,05,000.
- எம்.எல்.ஏ.க்களின் ரூ.1,05,000 ஊதியத்தில் மாதாந்திரப் படி ரூ.10,000, தொகுதிப் படி ரூ.25,000, அஞ்சல் படி ரூ.2,500, தொலைபேசிப் படி ரூ.7,500, தொகுப்புப் படி ரூ.5,000, வாகனப் படி ரூ.25,000 ஆகியவை அடங்கும்.
கூடுதல் சலுகைகள்:
எம்.எல்.ஏ.க்களுக்கு இலவச மருத்துவ வசதி, விமானம், ரயில், பேருந்து பயணச் சலுகைகள் உள்ளன. தங்களது தொகுதி அலுவலகத்தை நடத்த ஒரு ஊழியரை நியமிக்கும் உரிமை உண்டு; அவருக்கான சம்பளமும் அரசே வழங்குகிறது. சட்டமன்றக் கூட்டங்கள் அல்லது தொடர்புடைய கூட்டங்களில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நாளுக்கும் தினசரி படியாக ரூ.2,500 வழங்கப்படுகிறது.
இந்த ஊதிய அமைப்பு, மக்கள் பணியை திறம்படச் செய்ய ஊக்கமளிப்பதாகக் கருதப்படுகிறது. எனினும், ஊதிய உயர்வுகள் அவ்வப்போது விவாதங்களுக்கு உள்ளாகின்றன. மக்களின் வரிப்பணத்தில் இருந்து வரும் இந்த நிதி, திறமையான நிர்வாகத்திற்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
இதையும் படிங்க: அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!