×
 

முடியவே முடியாது... விஜய்க்கு 'நோ' சொன்ன காவல் துறை... மீண்டும் பனையூருக்குள் வைத்து முடக்க திட்டமா?

தமிழக வெற்றி கழகத்தினர் குறிப்பிட்டுள்ள தேதிக்கு அனுமதி தர முடியாது என காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து விஜய் பிரச்சாரம் மீண்டும் மேற்கொள்வதாக கட்சியின் நிர்வாகிகள் அனுமதி கேட்டு மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தினர் குறிப்பிட்டுள்ள தேதிக்கு அனுமதி தர முடியாது என காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து கூட ஆறுதல் கூறாமல் பனீர் வேலையே முடங்கி கிடந்த விஜய், ஒரு மாதத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து ஆறுதல் கூறினார். 

இதனை அடுத்து மீண்டும் களப்பணிகளை முழு உச்சியில் தொடங்க ஆரம்பித்தது தவெக. தேர்தல் சின்னத்தை தேர்ந்தெடுப்பது, வார் ரூம் அமைப்பது, நிர்வாக குழுவை கட்டமைப்பது, SIR - க்கு எதிரான ஆர்ப்பாட்டம் என தவெகவினர் முழுவீச்சில் இயங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: மீண்டு வந்த தவெக... மீண்டும் மக்கள் சந்திப்பு... சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்க விஜய் திட்டம்..!

தற்போது அந்த வரிசையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு தடைபட்டு போன தனது சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை துவங்க உள்ளதாகவும் , வரும் டிசம்பர் நான்காம் தேதி சேலத்தில் கூட்டத்தில் பங்கேற்கொள்ளதாகவும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டுள்ளது..சேலம் கோட்டை மைதானம் அல்லது  போஸ் மைதானம் , அல்லது சீலநாயக்கன்பட்டியில் தாளமுத்து நடராஜன் கட்டிடம் அருகே உள்ள தனியாரின் மைதானம் ஆகிய மூன்று இடங்களில் ஏதாவது ஒன்றில் அனுமதி கோரப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக ஆய்வு செய்துவிட்டு பின்னர் தெரிவிப்பதாக காவல்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர் . இது தொடர்பாக தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

அதே போல் விஜய் பிரச்சாரத்திற்காக டிசம்பர் ஆறாம் தேதி வரை அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் நான்காம் தேதி கார்த்திகை தீபம் உள்ளதாலும் , டிசம்பர் ஆறாம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும் பாதுகாப்பு காரணமாக நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி வரை அனுமதி வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர் மாற்று தேதி தெரிவிக்குமாறு கூறி காவல்துறை அதிகாரிகள் தவெகவினரிடம் கேட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விறுவிறு SIR… களத்தில் தவெக… அதுக்கு 16 பேர் கொண்ட குழு வெச்சு இருக்காங்களாம்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share