அரசு பள்ளி விடுதியில் அரங்கேறிய கொடூரம்... மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை... 2 பேர் கைது...!
இருவரும் வேறு மாணவிகளுக்கும் மது வாங்கிக் கொடுத்தார்களா? மேலும், யாரேனும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு பள்ளி விடுதி மாணவிகளுக்கு மது வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், விடுதி பெண் தூய்மைப் பணியாளர் மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழப்பாடி அருகே உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கி பயிலும் சமூக நல விடுதியில், ராதிகா என்பவர் பெண் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 8ஆம் தேதி இரவு, ராதிகா இரண்டு மாணவிகளுடன் மது அருந்தியதாகவும், அங்கு வந்த அவரது நண்பர் ரகுபதி, மாணவிகளை இருசக்கர வாகனத்தில் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அங்கு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், விடுமுறைக்காக வீட்டிற்குச் சென்ற மாணவிகள் நடந்த சம்பவத்தை தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிளஸ் 2 மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை... ஆபாச படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட கொடூரன் கைது..!
இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி, ராதிகாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், மாணவிகளுக்கு மது வாங்கிக் கொடுத்ததாக கூறப்படும் ரகுபதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவரும் வேறு மாணவிகளுக்கும் மது வாங்கிக் கொடுத்தார்களா? மேலும், யாரேனும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்... சீருடையுடன் காவலர் அட்ராசிட்டி...!