×
 

போலீஸ் அராஜகம் பண்ணுது! உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையீடு!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தின் போது வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் மற்றும் தனியார் மயமாக்குதல் எதிர்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் 13 வது நாளாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடி வந்த தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

அரசு தரப்பில் தூய்மை பணியாளர்களுடன் எட்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் சமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தொடர்ந்து போராடி வந்தனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

அதன்படி தூய்மை பணியாளர்களை அகற்றுவதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நள்ளிரவில் குண்டு கட்டாக தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ச்ச்சீ... நீரோ மன்னனை விட ஸ்டாலின் மோசம்! நடுராத்திரில கைது பண்ண நீதிமன்றம் சொல்லுச்சா? அதிமுக கண்டனம்..!

மூத்த வழக்கறிஞர் ஏ ஆர் ரமேஷ், வழக்கறிஞர் ஆர் கிருஷ்ணகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.  போராடிய தூய்மை பணியாளர்களை அப்புறபடுத்தியபோது, போலீசார் அத்து மீறியதாகவும், போராட்டக் களத்தில் இருந்து அப்புறப்படுத்தும் போது கட்டுப்பாட்டுடன் செயல்பட அறிவுறுத்தியும் போலீசார் அத்துமீறி உள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

மேலும் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் காணாமல் போய்விட்டார் என்றும் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து போராட்டத்திற்கு மாற்று இடம் ஒதுக்க கோரி தலைமை நீதிபதி அமர்விலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனுமதி பெற்று போராட்டம் நடத்த தடையில்லை என்றும் அனுமதி பெற்று போராட்டம் நடத்தும் போது அதை காவல்துறையினர் தடுத்தால் தலையிடுவோம் எனவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. 

 மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிபதி ரமேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: யோவ்... அவங்க தேச விரோதிகளா? தூய்மை பணியாளர்கள் கைது… பாசிச திமுகவின் அராஜகம் என விஜய் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share