#BREAKING: தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது! ரிப்பன் மாளிகையில் பரபரப்பு... போலீசார் குவிப்பு
தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குண்டு கட்டாத போலீசார் கைது செய்தனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராடிவரும் தூய்மை பணியாளர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் சமூக முடிவு ஏற்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்தது. தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவை ஏற்று அனுமதித்த இடத்தில் போராட வேண்டும் என்றும் ரிப்பன் மாளிகை முன்பு இருந்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.
நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: நாங்க என்ன கஞ்சா, சாராயம் விக்குறவங்களா? கொளுத்தினு சாவோம்! தூய்மை பணியாளர்கள் ஆவேசம்..!
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி தூய்மை பணியாளர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து முழுக்கங்களை எழுப்பிய நிலையில், போலீஸ் வாகனங்களில் வலுக்கட்டாயமாக தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீதிக்காக போராடும் தங்களை அப்புறப்படுத்தும் போலீசாரை நோக்கி தூய்மை பணியாளர்கள் சாபமிட்டனர். இந்த நெருக்கடியில் பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: இடையூறு தான்! தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்துங்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!