×
 

சுழற்றி அடித்த புழுதிக் காற்று..! திரையரங்கின் மேற்கூரை விழுந்து சேதம்..!

பலத்த காற்று மற்றும் கனமழை பெய்ததால் ஈவிபி பிலிம் சிட்டி அருகே உள்ள சந்தோஷ் திரையரங்கின் மேற்கூரை இடிந்து சேதமடைந்தது.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மாலை சென்னையில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்தது. சூறைக்காற்று வீசியதால் சாலைகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆங்காங்கே, மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள சந்தோஷ் திரையரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதி கனமழை மற்றும் பலத்த காற்றால் இடிந்து சேதமடைந்துள்ளது. இதனால், திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.மேலும், சீரமைக்கும் பணிகளில் திரையரங்க நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். ஈவிபி பிலிம் சிட்டி அருகே உள்ள ஈவிபி திரையரங்கம் அண்மையில் சந்தேஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சட்டென மாறிய வானிலை! வெளுத்து வாங்குது மழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

இதையும் படிங்க: கடைகளில் இனி போர்டு இப்படி இல்லைனா? கடை உரிமையாளர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share