×
 

ஃபுல் மப்பில் சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை... பள்ளி மாணவர்களை பாழாக்கிய முதியவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!!

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவர்கள், சிறார்களை  ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்திய முதியவர் உட்பட மூவர் போக்சோ சட்டத்தில் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூர் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த மாணவன் அஷ்வின் (15) கீழக்காவனிப்பட்டி கண்மாயில் கடந்த ஜூன் 4ம் தேதி பள்ளித்திறந்த முதல் நாளில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது சக நண்பர்களான இலந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரரான அரவிந்த், காரையூரை சேர்ந்த கணேசன் ஆகிய இளைஞர்கள் அஷ்வினை ‛ஓரினச் சேர்க்கைக்கு‛ பயன்படுத்தி அதை மற்றவர்களிடம் சொல்லாமல் தடுக்க கழுத்தை துண்டால் நெரித்தும் அதன் பின்பு கத்தியால் கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இவ்வழக்கை விசாரித்த தனிப்படை போலீசாரான சார்பு ஆய்வாளர்கள் ஹரிகிருஷ்ணன், குணசேகரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் இலந்தமங்களம் அரவிந்த் மற்றும் கணேசன் ஆகிய இருவரை கைது செய்தனர். இதனை அடுத்து போலீசருக்கு சந்தேகம் கிளம்பியுள்ளது. இவ்வழக்கில் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது மாணவர்கள், சிறுவர்கள் ஓரினச் சேர்க்கை பழக்கத்திற்கு அடிமையாவதற்கான பின் புலத்தை தேடினர். அதில் அப்பகுதியில் மேலும் சில பள்ளி மாணவர்கள் இந்தப் பழக்கத்திற்கு அடிமையானது தெரிய வந்தது. இதனை அடுத்து விசாரணையை தனிப்படை போலீசார் விரிவு படுத்தினார். அப்போது காரையூர் கிராமத்தில் 15 -17 வயது சிறுவர்களை, குறிப்பாக பள்ளி மாணவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று அவர்களுடன் இனிமையாக பேசி பழகுவதும், பின்னர் காடு, கண்மாய் போன்ற பகுதிகளுக்கு அழைத்துச் சென்று உணவு பலகாரங்கள் கொடுத்த உபசரிப்பதும், பின்னர் மது அருந்த பழக்கி, போதையிலிருக்கும் போது ஓரினச்சேர்க்கை (பாலியல் வன்புணர்வு) செய்வதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவை விவகாரத்தில் புதிய மோதல்..! நேரலையை துண்டிப்பதா..? சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இவர்களுடன் தொடர்ந்து சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதே காரையூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் 55 , இலங்கை தமிழர் குடியிருப்பைச் சேர்ந்த அசோக்குமார் (60), காரையூர் அழகுராஜா (19) ஆகிய 3 பேர் கொண்ட கும்பலை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் இதுவரை சுமார் 5 பள்ளி மாணவர்களிடம், இவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கண்டவரயான்பட்டி போலீசார் இவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதோடு பெற்றோர்கள் தங்கள் குடும்பத்து சிறுவர்களை கண்காணிக்க போலீசார் வலியுறுத்தியுள்ளனர். புதிய நபர்களிடம் தொடர்பு, பள்ளிக்கு செல்வதை உறுதி செய்வதும், வீட்டிற்கு குறித்த நேரத்திற்கு வருவதும் குறித்து கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். பள்ளி மாணவன் கொலை வழக்கின் தொடர் விசாரணையில் ஈடுபட்டு, குற்றத்திற்கான அடிப்படை காரணத்தை கண்டுபிடித்து  கைது செய்தது குறிப்பிடதக்கது.  
 

இதையும் படிங்க: எடப்பாடி கோட்டையில் விரிசல்.? பனையூருக்கு படையெடுத்த அதிமுகவினர்..! ஆதவ் உரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share