வாட்டும் வெயில்... தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2026-ஆம் ஆண்டு கோடைக் காலத்தில், வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, சில இடங்களில் 108 ஃபாரன்ஹீட் வரை பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையம் அடிக்கடி வெப்ப அலை எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. இந்த வெயில் வெறும் தொல்லை மட்டுமல்ல. அது பொது சுகாதாரம், விவசாயம், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கை ஆகிய அனைத்தையும் பாதிக்கும் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
வெயிலின் தாக்கத்தால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை போன்ற பகுதிகள் வெப்பத்தின் மையங்களாக மாறியுள்ளன. தற்போது கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளை பெருமளவு பாதிக்கும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் உடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: தமிழ்நாடு என்னவேணா செய்யட்டும்..! மேகதாது அணை கட்டுவது உறுதி... டி. கே. சிவக்குமார் திட்டவட்டம்..!
இதைத்தொடர்ந்து பள்ளிகள் திறப்பு நான்காம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருந்தது இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கோடை வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கோரிக்கைகளுக்கு இணங்க 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் நான்காம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய வளசரவாக்கம் டாக்டர் விபரீத முடிவு! மன உளைச்சலால் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!